வலைப்பதிவுகள்

வெகுநாள் கழித்து பாட்டியைப் பார்க்கிறாள் ஜமீலா. திருமணம் முடித்திருந்தாலும் அவரைப் பார்க்கும்போது மீண்டும் குழந்தையாக மாறினாள். பேத்தியாகவும் மகளாகவும் அவளை வளர்த்தவர். முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதை சொல்லாமல் செய்து காட்டுபவர். 

தன்னைத் தொட்டிலில் தாலாட்டியது முதல் தனது பிள்ளைக்குத் தொட்டில் கட்டச் சொல்லித் தரும் வரை கூட இருந்தவர். இரண்டு தாய்மார்களைக் கொண்டிருந்த பெருமை பேத்திக்கு. கொள்ளுப் பேரனை கண்ணால் கண்ட மகிழ்ச்சி பாட்டிக்கு. பிறகு குழந்தை வளர்ப்பும் வேலையுமாக வெளியூரில் பரபரப்பான வாழ்க்கையில் சிக்கியிருந்தவள் அன்றுதான் அம்மம்மாவைச் சந்தித்தாள்.

‘எப்படி இருக்கீங்க?’ என்று கட்டியணைத்து முத்தமிட்ட பிறகே அவர் அவ்வளவு எடை குறைந்திருந்ததை உணர்ந்தாள். பலவீனமாகத் தெரிந்தவர் கையில் குச்சியுடன் நடக்கப் பழகியிருந்தார். முதியோர் இல்லத்தில் அவராகவே நடமாட அது உதவியது. அவரது தன்னம்பிக்கையை பல மடங்கு கூட்டியிருந்தது.

‘நான் கையப் புடிச்சிக்கிறேன்’ என்ற மற்றவர்களின் உதவியை கோபத்துடன் மறுத்தார்.

‘தள்ளு, நானே படி ஏறிடுவேன்’ எனக் குச்சியைப் பலமாக ஊன்றி மூச்சு வாங்க ஏறியபோது பெருமிதத்தோடு புன்னகை செய்தார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன