வலைப்பதிவுகள்

Books
Grab your copy here

இந்தப் புத்தகம், ஒற்றர்களின் ரகசிய உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது. வரலாற்றின் புதைக்கப்பட்ட பக்கங்கள் மட்டுமே அவர்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கும். உயிரைப் பணயம் வைத்து அவர்கள் உழைத்ததெல்லாம் அமைதியான ஓர் உலகை நமக்கு அளிப்பதற்காக. அதற்கான சன்மானம் அவர்களது கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

நம்மால் ஒற்றர்களைக் கண்டுகொள்ளவோ, கேள்விப்பட்டிருக்கவோ முடியாது போயிருக்கலாம். ஆனால் அவர்களால் கிடைத்த நற்பலன்களை நிச்சயம் அனுபவித்திருப்போம். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னரே தங்கள் சாமர்த்தியத்தால், ஒற்றர்கள் உருவாக்கி வாழ்ந்திருந்த மாய உலகுக்குள் நுழைந்து பார்ப்போம் வாருங்கள்.

இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.

யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத்தப்படும் இந்த யுத்தங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள் தெரியுமா? உத்திகள், படைத்திறன், ஆயுத பலம், திருப்பங்கள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் எவையெனத் தெரியுமா?
அணுகுண்டுக்கு முந்தைய கால யுத்தங்களில் தொடங்கி, இன்றைய செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ஆளும் யுத்த காலம் வரை என்ன நடக்கிறது-என்னவெல்லாம் இனி நடக்கப் போகிறதென்று அப்பட்டமாக உடைத்துப் பேசுகிறது இந்நூல்.

இது ரஷ்யாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாகத் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ரஷ்யா. முன்னேறிய உலக நாடுகளுக்கு முன், தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை கம்யூனிசத்தின் வழியே நிரூபிக்கப் போராடினார்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அதிபரும் இதையே முயற்சி செய்தனர். ஆனால் வெவ்வேறு வழிகளில் செய்தனர். மக்கள் அதிருப்தியில் வாழ்ந்தாலும் தங்கள் இலக்கை விட்டுக்கொடுக்கவில்லை. நாட்டை மேம்படுத்த அதிபரும், மக்களுமாக மேற்கொண்ட பயணமே இந்தப் புத்தகம்.
அமெரிக்காவின் செயல்களை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்று ரஷ்யா. அத்தகைய வலிமையை அவர்களாகவே வளர்த்துக் கொண்டவர்கள். ஜனநாயகத்தை மட்டுமே பரவலாக அறிந்திருக்கிற தலைமுறைக்கு, கம்யூனிச, சர்வாதிகார ஆட்சிகளை இது அறிமுகப்படுத்தும்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆவணப்படுத்தும் மிக முக்கியமான புத்தகம் இது.
உக்ரைனை இரண்டு நாள்களில் கைப்பற்றிவிட நினைத்தது ரஷ்யா. இரண்டு வருடங்களாகியும் யுத்தம் தொடர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது இந்நூல்.
மட்டுமல்லாமல், போர்க்களமாகியிருக்கும் உக்ரைனில் மக்கள் படும் அவலங்களையும் அதைப் பொருட்படுத்தாமல் எதிர்கொண்டு வெல்லத் துடிக்கும் அவர்களது வேட்கையையும் வேர் வரை ஆராய்கிறது.
நவீன உலகில் இனி எங்கே போர் நடந்தாலும் அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவும் நூல் இது.