வலைப்பதிவுகள்

“ஹை, எனக்குப் பல் விழுகப் போகுதே! டூத் ஃபேரி எனக்கு கிஃப்ட் குடுப்பாங்களே!”

“ஐயையோ, மறுபடியுமா! இந்த தடவை டூத் ஃபேரி கிட்ட என்ன கிஃப்ட் வேணும்னு கேட்டிருக்க பாப்பா?”

ஒவ்வொரு முறை பல் விழுந்ததும் அன்றைய இரவு தூங்கி எழும்போது, பல் தேவதை அவளது தலையணைக்கடியில் கிஃப்ட் வைத்துவிட்டுப் போவது வழக்கம். பல் ஆடுவதைச் சொல்லும்போதே, அவள் தேவதையிடம் என்ன கிஃப்ட் கேட்டிருக்கிறாள் என்பதையும் எங்களிடம் சொல்லி விடுவாள்.

“இந்த தடவை என்ன கிஃப்ட் கேட்டிருக்கேன்னு நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். மனசுக்குள்ளயே கேட்டுட்டேன். சஸ்பென்ஸா வச்சுப்பேன்.”

“ஏன் பாப்பா?”

“அப்போ தான டூத் ஃபேரி குடுக்கற சாக்லேட் பால்ஸ் முழுக்க நான் மட்டும் சாப்பிட முடியும்?”

“ஓ, சரி சரி. அப்ப சஸ்பென்ஸாவே இருக்கட்டும்.”


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன