வலைப்பதிவுகள்

பெண் பார்க்கும் சடங்கைப் போல மாப்பிள்ளைப் பார்ப்புக்கும் பஜ்ஜி தயாரானது. பையனுக்குக் காபி கொடுக்கும் வேலையைக் கொடுக்க விரும்பாத அம்மா பருப்பு பாயசம் செய்தார். அதையும் அவரே கொடுத்தார்.

வருங்கால அத்தையைப் பற்றிய அத்தனை தகவல்களையும் அன்று முடிந்த மட்டும் சேகரித்தாள் கவி. பதின்ம வயதில் இருந்ததால் வந்திருந்த அனைவருடனும் சீக்கிரம் பழகிவிட்டாள். வழியனுப்பும் வரை அதுவே வேலையாக இருந்தாள். எல்லாம் தாய்மாமா விக்ரமுக்காக.

பத்து வயதே இருவருக்கிடையே வித்தியாசம் என்பதால் அடிதடியுடன் ஒன்றாக வளர்ந்தவர்கள். கிரிக்கெட், சினிமா, சீட்டாட்டம் என சகலத்திலும் சகாக்களாக இருந்தவர்கள். திருமண முடிவை ஒரு வாரம் கழித்துச் சொல்வதாகக் கூறிச் சென்றார்கள். சம்பந்தம் கைகூடாவிட்டால் அக்கா மகளுக்கே முடித்து விடலாமெனப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

‘அவங்க நோ சொல்லிட்டாலும் எனக்கு இந்தப் பொண்ணு இருக்கே.’ எல்லாருக்கும் கேட்குமாறு கத்தினான்.

‘நான் உன் மக’ என்றவள் கொட்டிவிட்டுச் சென்றாள். ‘ஆமா செல்லம்’ என்றவன் அவளது தலையில் இருந்த ஹேர் கிளிப்பைக் கழட்டி விட்டான்.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன