வலைப்பதிவுகள்

‘என்ன தாத்தா நீங்க. நான் குடுத்ததைப் போடாம வந்திருக்கீங்க?’ எனக் கோபித்துக் கொண்டாள் ஷாலினி.

அவளுக்குப் பதிலளிப்பதற்குள் அந்த வளாகத்தில் இருந்த மூன்று பேர் அவருக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்கள். கூடவே ஆசீர்வாதமும் பெற்றுக் கொண்டார்கள். ஐந்தாயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளியின் தாளாளரும் பாதிரியாருமாக இருந்தவர். இன்னும் ஒரு வருடத்தில் பணி ஓய்வு பெறப் போகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெள்ளைச் சட்டையில் பச்சைக் கோடுகள் போட்ட டீ-ஷர்ட் ஒன்றைப் பரிசளித்திருந்தாள் பேத்தி. அதன் அளவு சற்றே இறுக்கமாக இருந்ததால் அடுத்த மாதம் சந்திக்கும்போது வாக்கிங் சென்று இளைத்து அதை அணிந்து வர வேண்டும் என்று கூறி இருந்தாள். கட்டளையைக் கடைபிடித்தாலும் குறையாத அவரது தொப்பையை பாவம் அவர் என்ன செய்வார்?

‘நீங்க ஒல்லியாகல. ஒழுங்கா எக்ஸசைர்ஸ் செய்யல?’ என்பதையே அறைக்கு வரும் வரைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரைப் பார்த்து மரியாதையுடன் கைகூப்பிய பலரும் அதைக் கேட்டுச் சிரித்தபடியே நகர்ந்தார்கள். சிரிக்காமல் அவளிடம் திட்டு வாங்கியபடியே அவளது கைப்பிடித்து நடந்து வந்தார் சின்ன தாத்தா.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன