வலைப்பதிவுகள்

‘இரண்டு வாரம் தள்ளி ஆஸ்பத்திரி போலாம்னு தோணுது’ தாயாரின் இயலாமை ஐந்நூறு கிமீ தொலைவிலும் செவிவழி புரிந்தது. எட்டு மாதங்களாக ஒவ்வொரு வாரமும் நடந்த மருத்துவமனை விஜயத்தின் பலனாகப் பலமிழந்து இருந்தார்.

மருத்துவர் நிச்சயம் வரச் சொல்லி இருக்கிறார். சளி பிடித்தால் சாப்பிடும் ஆன்டிபயோடிக் போலத்தான் இதுவும். தொடர்ந்து சீரான இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அறிவியல் ஆய்வாளரைப் போலப்  பேசினேன். பலவீனம் குறையவில்லை.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இப்படிச் சீக்கிரமா சரியாகுமென்று யாருமே நினைக்கவில்லை. ஆனால் அற்புதமாக நமக்கு நடந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்கள் பொறுத்தால் போதும். பிறகு பூரண விடுதலை. பழையபடி நீங்கள் எங்களைப் பார்க்க சென்னைக்குக் கூட பயணம் செய்யலாம் என்று நடக்கப்போவதை அவரது கண்முன்னே விரித்தேன்.

‘ஆமால்ல. கத்திரிக்காய் சட்னி செஞ்சு குடுத்து எத்தனை நாளாச்சு’ என்பதில் ஆரம்பித்து என்னென்ன சமையல் நடக்கிறது? சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கிறோமா? என உரையாடல் எங்கெங்கோ திசை மாறியது. அவருக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்ததும் மருந்துக்குச் சம்மதித்தார்.     


2 responses to “ஊட்டச்சத்து”
  1. expertthoroughly95f314b436 Avatar
    expertthoroughly95f314b436

    உண்மையான ஒன்று💐💐

    1. வினுலா Avatar

      நாற்பது அறுபதில் தேவைப்பட்ட இந்த ஊட்டச்சத்து இக்கால தலைமுறைக்கு இருபதுகளில் தேவைப்படுகிறது.

Leave a Reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading