வலைப்பதிவுகள்

எப்போதாவது பார்வையாளர்களைக் கொண்டிருந்தது வேதாரண்யம் பறவைகள் சரணாலயம். பீட்டரும் அமலாவும் வயதான பெற்றோர்கள்,  குழந்தைகளோடு அங்குச் சென்றார்கள். காருக்குள் இருந்தே வெளியே பார்க்குமாறு வாயிலில் அறிவுறுத்தினார்கள். நுழைவுக் கட்டணத்தை மட்டும் குறிப்பிட்ட ஒரு சிறிய ரசீதுடன் உள்ளே போனார்கள்.

வன அலுவலகம் அமைத்திருந்த பாதையில் மட்டுமே வண்டியைச் செலுத்த வேண்டும். வழியெங்கும் கலைமான்கள், நாரைகள், செங்குரங்குகள், காட்டுப்பன்றிகள் போன்றவைச் சுதந்திரமாகத் திரிந்தன.

ஆர்வ மிகுதியில் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் கடலோரத்தில் இருந்த ஈர மணலில் மாட்டிக்கொண்டார்கள். என்ஜினை எவ்வளவு உயர்த்தியும் காரின் சக்கரங்கள் நகரவில்லை. குடும்பம் முழுவதும் கீழிறங்கி நின்றது.

இணையம், அலைபேசி அழைப்பு, ஏன் அவசரப்பிரிவு எண் கூட செயல்படும் எல்லையில் இல்லாத இடம் அது. செய்வதறியாது நின்றார்கள். முதியவர்கள் முழங்காற் படியிட்டு இறைவனிடம் தஞ்சமடைந்தார்கள். எங்கிருந்தும் எந்நிலையிலும் தொடர்புகொள்ளக் கூடிய உறவு என்பதை அறிந்திருந்தார்கள்.

பத்து நிமிடங்களில் சுற்றிப்பார்க்க வந்த இன்னொரு ஜீப் கண்ணுக்குத் தெரிந்தது. சிவப்பு நிற சட்டையைக்  கழற்றி மேலேச் சுற்றியவறே உதவிக்கு ஓடினார்கள். மண்டியிட்டவர்கள் நன்றி கூறினார்கள்.


One response to “எப்போதைக்குமான உறவு”
  1. expertthoroughly95f314b436 Avatar
    expertthoroughly95f314b436

    Almighty knows our silent prayer.

Leave a Reply to expertthoroughly95f314b436Cancel reply

Discover more from வினுலா

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading