வலைப்பதிவுகள்

கைகளுக்கு அடக்கமான ஒரு சீப்பை எடுத்துக்கொண்டாள். அவளது கைக்கு வலமிருந்து இடமாக முற்றத்தில் அமர்ந்திருந்தவரின் தலை முடியைச் சீவினாள். ஆரம்பத்தில் சீராக இருந்தாலும் போகப்போக சுருட்டையாக முடிந்தது. அவ்விடங்களில் அவளால் மயிர்வாரியை கீழே வரை இழுக்க முடியவில்லை. எதுவரை முடிகிறதோ அதுவரை நிறுத்தினாள். மறுபடியும் அதையேத் தொடர்ந்தாள். 

நாற்காலியில் அமர்ந்திருந்தவர் ‘போதும் பாப்பா’ என்று மட்டுமே சொன்னார். எதையும் தடுக்கவில்லை.

அறைக்குள் ஓடிச் சென்றவள் சிவப்பு வண்ண ஹேர்பாண்டுடன் திரும்பினாள்.

மீண்டும் சிகை அலங்காரம் தொடர்ந்தது. முடிவில் செந்நிறத்தில் கட்டப்பட்ட கொண்டை ஒன்று முளைத்திருந்தது.

‘பாட்டி, இங்க வந்து பாருங்க’ என உரக்க அழைத்தாள்.

குரலைக் கேட்டு அவசரமாக வெளியே வந்தவர் அந்தக் கோலத்தைப் பார்த்து திடுக்கிட்டார்.

‘என்ன பண்ணி வச்சிருக்க?’ என்றார்.

‘நாளைக்கு ஆபீஸ் போகணும். எனக்கு ப்ராமிஸ் குடுத்திருக்கார். அதான் இப்பவே ரெடியாக்கி விட்டுட்டேன். என் தாத்தா எல்லாரையும் விட அழகா இருக்கணும்ல?’ என்றபடி பவுடர் டப்பாவை எடுக்க ஓடினாள்.


3 responses to “அலங்காரம்”
  1. expertthoroughly95f314b436 அவதார்
    expertthoroughly95f314b436

    எல்லா தாத்தா பாட்டிக்கும் இந்த மாதிரி வாய்ப்புகள் அமைவதில்லை. 😍🥰💜🩵💖

    Liked by 1 person

  2. கஸ்தூரி அவதார்
    கஸ்தூரி

    அருமையான பதிவு. உண்மை அனைத்து தாத்தா பாட்டிகளுப்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

    Liked by 1 person

வினுலா க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன