வலைப்பதிவுகள்

நாள் முழுவதும் விட்டத்தைப் பார்ப்பது யாருக்குப் பிடிக்கும்? பயமுறுத்தும் பெரிய புதிய உருவங்கள். வண்ண பொம்மைகள். பழகிய முகங்களையே அவை எழுப்பும் சத்தத்தை வைத்தே கண்டுபிடிக்கிறாள்.

சில நாள்களாக ஒருக்களித்துப் படுக்கிறாள். தினமும் மாற்றப்படும் தொட்டிலின் நிறத்தைப் பார்க்க முயற்சி செய்கிறாள். மெத்தையைத் தொட்டிருக்கும் கையையும் காலையும் ஊன்றுகிறாள். அவற்றின் ஜோடியையும் அதே பக்கம் கொண்டு வந்து படுக்கை விரிப்பைத் தொடுகிறாள். தலையை ஊன்றி இடுப்பின் துணையோடு வயிற்றைத் திருப்புவது ஒன்றே பாக்கி.

அம்மாவோ அப்பாவோ தராத தைரியத்தை அண்ணன் தனியே விளையாடும்போது தந்து விடுகிறான். ஊர் முழுக்க அலைபேசியில் அழைத்து ‘பாப்பா குப்புற விழுந்துட்டா’ என்றோம். தேங்காய் உடைக்கச் சொன்னார்கள்.

நீண்ட விடுமுறை முடிந்து அவன் பள்ளிக்குச் சென்றான். எவ்வளவு உதவியும் அவளுக்குத் துணிச்சல் வரவில்லை. மாலை வீடு திரும்பியதும் தங்கைக்கு எப்படி உதவினாய் எனக் கேட்டோம்.

‘எதுக்கு கஷ்டப்படணும்னு நான்தான் திருப்பி விட்டேன்’ என்று சாதாரணமாகச் சொன்னான்.

அண்ணனின் குரல் கேட்டதும் ஒரு பக்கமாகத் திரும்பிச் சத்தம் கொடுத்து உதவிக்கு அழைத்தாள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன