நெருங்கிய நண்பர்கள் ஐவருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் தொடங்கிய நட்பு என்பதால் இனம், மொழி கடந்து சகலத்திலும் துணை நின்றது.
புதிய நகரம், சூழல், உணவு, கலாசாரம், தொழில்நுட்பம் என எல்லாவற்றையும் ஒன்றாக எதிர்கொள்ளும் தைரியத்தை அளித்தது. இரண்டு வருடங்களாக ஒரே அறையில் தங்கிச் சமைத்து பணிக்குச் சென்றார்கள். ஒவ்வொருவரின் குடும்பப் பின்னணியையும் கடமைகளையும் நன்கு அறிந்திருந்தார்கள்.
ஆண்டின் முடிவில் அவரவர் செய்த வேலைகளுக்கு ஏற்ப அலுவலகத்தின் நிர்வாகி அவர்களை மதிப்பீடு செய்யும் காலம் வந்தது. திறமைகளில் வேறுபாடு இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவி, குழுவின் இலக்குகளை காலதாமதம் இன்றி அடைந்திருந்தார்கள். வாடிக்கையாளரிடம் நிறுவனத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தார்கள்.
அனைத்தையும் கவனித்து வந்திருந்த மேலாளர் எல்லோருக்கும் தொழிலில் வேண்டுமான வளர்ச்சியை அவரால் பரிந்துரைக்க முடியாத நிலையில் இருந்தார். ஒற்றைக் கேள்வியை அவர்கள் முன்வைத்தார். தனித்தனியே அறைக்குள் அழைத்து, ‘நீங்க என்ன ஆளுங்கப்பா? மேற்கொண்டு பதவியில முன்னேற அதுவும் முக்கியம்’ என்றார்.

